The Indian Times

அட ச்சை! என்னயா இப்படி பண்றீங்க? இனிமே ரோடு கடையில சாப்பிட எப்படி மனசு வரும்? | Viral Videos

இந்தியாவை பொறுத்தவரை மக்கள் தொகை மிக அதிகம் உள்ள நாடு. வருமானத்திற்காக பலர் பல வேலைகளில் ஈடுபடுவது வழக்கம். ஙெளிநாடுகளைப் போன்று எல்லாவற்றிக்கும் இயந்திர பயன்பாடு என்பது கிடையாது. மனித வளத்தை மூலதனமாக பயன்படுத்தியே இங்கு பல்வேறு தொழில்கள் நடைபெறுகின்றன. அதில் முக்கியமான ஒன்று உணவுத் தொழில். சென்னை பெங்களூரூ, மும்பை போன்ற ஐடி கம்பெனிகள் உள்ள குவிந்து இருக்கும் நகரங்களில் தள்ளுவண்டிகளில் உணவுபொருட்களை விற்கும் கடைகள் ஏராளம்.

Advertisement

அதே போன்று காளான், பானிபூரி, பாவ்பாஜி போன்ற சாட் ஐட்டங்களும் அமோகமாக விற்பனை நடக்கும் ஒரு தொழிலாக உள்ளது. இப்போது பிரச்சினை என்னவென்றால் இங்கு பலர் தரமான பொருட்களை தருவதில்லை. மாவை காலில் போட்டு மிதிப்பது, வியர்வையை மாவில் தெளிப்பது, பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உண்ண வரும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் கடை நடத்துபவர்கள் நடந்து கொள்வர். தரமற்ற உணவுப் பொருட்களையும், கலப்படம் கலந்த உணவுப் பொருட்களையும் உண்டு இறந்தவர்கள் நம் நாட்டில் பலபேர் உண்டு. Youtube Video Code Embed Credits: Tamil Amazing Facts

Advertisement

அது போன்று தரமற்ற உணவுப் பொருட்கள் செய்யும் வீடியோக்களில் தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரஸ்க் செய்யும் இடத்தில் ரஸ்க்கை பேக்கிங் செய்வதற்கு முன்பு நாக்கால் நக்குகிறார் ஒருவர். அடுத்த காணொளியில் பானிபூரிக்கு வைத்திருந்த ரசம் காலியாகிவிட்டதால் கேவலமான செயலை செய்கிறார். இது போல தரமற்ற உணவுகள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. அனைவரும் அவ்வாறு செய்வதில்லை. சிலர் செய்யும் காரியத்தினால் அனைவர் பெயரும் கெட்டு விடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வைரல் வீடியோவை நீங்களும் காண…Watch the below video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in