The Indian Times

வரது நாலு நாள் ஷூட்டிங்…இதுக்கு ஏன் விலகனும்? கமலை சரமாரியாக கேள்வி கேட்ட வனிதா | Vanitha Vijayakumar

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் வனிதா முதல் முறையாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சமீப காலமாக டிவியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, அடிக்கடி கேட்டு கொண்டு வரும் பெயர்தான் வனிதா. நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா இந்த தம்பதியின் மூத்த மகளான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். மூன்று திருமணம் முடிந்த நிலையில் யாருடனும் வாழ பிடிக்காமல் அனைவரையும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் ஹரி விஜய்குமாருடன் வாழ்ந்து வரும் நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

Advertisement

இவர் தற்போது புதிதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஆரம்பித்த 3 வாரங்களாக சண்டை போட்டு கொண்டே வந்தார். நிகழ்ச்சியிலிருந்து விலகும் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பிக்பாஸ்ஸிடம் சென்று நான் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி அழுதார். இந்த நிலையில் அவருக்கு மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிய பின் வனிதா முதல் முறையாக தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் நாலு நாள் தான் கமலஹாசன் ஷூட்டிங்க்கு வர போகிறார் அவர் சொந்த படத்தில்தான் அவர் நடிக்க போகிறார். அதற்க்கு ஏன் பிக்பாஸை விட்டு வெளியேற வேண்டும் என கமலை கேட்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சி தவறான பாதையில் போகிறது என்றும், அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்றும் அவர் கூறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in