ரம்யா கிருஷ்ணன் தான் காரணமா? உண்மையை போட்டு உடைத்த வனிதா | BiggBoss Ultimate

பிக்பாஸ் சீசன் 3ன் அதிரடி போட்டியாளர் வனிதா. பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து மாஸ் காட்டி வந்தார் வனிதா. தற்போது கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் டிஸ்ன ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் வனிதா. இவர் இருந்தால் சண்டை, சர்ச்சரவு என டிஆர்பி உயரும் என்ற வகையில் பிக்பாஸ் டீம் வனிதாவை களம் இறக்கியது. அதே போல் முதல் மூன்று வாரம் வீட்டை அலற விட்டுக் கொண்டிருந்தார் வனிதா.எப்பொழுதும் சண்டை, எதற்கெடுத்தாலும் சண்டை, நான் டாஸ்க் விளையாட மாட்டேன் என பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் சண்டை மேல் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்.

ரம்யா கிருஷ்ணன் தான் காரணமா? உண்மையை போட்டு உடைத்த வனிதா | BiggBoss Ultimate 1

விளம்பரம்

 

தற்போது கமல் அல்டிமேட்டிலிருந்து விலகியுள்ளார். சிம்பு மீதி நாட்களை தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் வனிதா நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை செய்தார். சீசன் 5ல் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட இருந்த போது ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதே போல தற்போது கமல் விலகியுள்ள நிலையில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவார் என்ற பயத்தில் வனிதா விலகி ஓடிவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.  இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா நான் ரம்யா கிருஷ்ணனுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாக சிலர் கிளப்பி விடுகின்றனர். Youtube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்

ரம்யா கிருஷ்ணன் தான் காரணமா? உண்மையை போட்டு உடைத்த வனிதா | BiggBoss Ultimate 2

நான் எப்போதும் என்னை நானே மதிக்கிறேன், மேலும் துணிச்சலான முடிவை மட்டுமே எடுப்பேன், அப்படித்தான் வீட்டை விட்டு வெளியேறும் முடிவையும் எடுத்துள்ளேன், என்னுடைய நிலையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்த பிக்பாஸ் டீம் மற்றும் டிஸ்னிக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சல்லித்தனமான விஷயங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், நான் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளேன் சிறு குழந்தைகள் வேண்டுமானால் இந்த நாடகங்களை ரசிக்கட்டும் என்று அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கோபமாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment