The Indian Times

ஒரு தாயின் பாசம்…பிரிந்து சென்ற மகனின் பிறந்தநாளுக்கு vanitha vijayakumar கூறிய கண்கலங்க வைக்கும் வாழ்த்து

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார்.1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் இவரின் மகன் விஜய் ஸ்ரீ தாயை பிரிந்து தாத்தா விஜயகுமார் வீட்டில் வசித்து வருகிறார்.விஜய் ஸ்ரீ யை தன்னிடம் ஒப்படைக்க வனிதா கூறி விஜயகுமாரிடம் சண்டை இட்டார்.இந்த பிரச்னை கோர்ட்டு வரைக்கும் சென்றது.இதனால் தந்தை மற்றும் மகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது.தனது மகனை பற்றி பல இடங்களிலும் கூறியுள்ளார்,இன்று வரை அவரது மகன் மீது மிகுந்த பாசத்தில் தான் உள்ளார் வனிதா ,

இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் தனது மகன் விஜய் ஸ்ரீகாக நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் முதல் காதலே,நீ தான் என் முதல் காதல்,அம்மாவுடைய காதலுக்கு எப்பொழுது அளவில்லாத காதல் ஆகும்.இதை யாராலும் மறுக்கமுடியாது.ஒரு அம்மாவாக இது எனது 21 வது பிறந்தநாள்,எப்போவுமே நீ எனக்கு லட்டு தான் ,உன்னுடைய எல்லா கனவுகளும் நினைவாக கடவுள் எப்போவும் துணை இருப்பார் என கூறி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Embed video credits : Little Talks

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Manic — 26/5/2022

Valthukkal mam