The Indian Times

அவனை நேரில் சந்தித்தால் அறை தான்-மகன் பற்றி கோபமாக பேசிய வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.அவரின் பெயர் தான் விஜய் ஸ்ரீஹரி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் இவரின் மகன் விஜய் ஸ்ரீ தாயை பிரிந்து தாத்தா விஜயகுமார் வீட்டில் வசித்து வருகிறார்.விஜய் ஸ்ரீ யை தன்னிடம் ஒப்படைக்க வனிதா கூறி விஜயகுமாரிடம் சண்டை இட்டார்.இந்த பிரச்சனை கோர்ட்டு வரைக்கும் சென்றது.இதனால் தந்தை மற்றும் மகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது.தற்போது வரை இவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தனது மகனை பற்றி பல இடங்களிலும் வனிதா கூறியுள்ளார்.இன்று வரை அவரது மகன் மீது மிகுந்த பாசத்தில் தான் உள்ளார் வனிதா.என்றாவது ஒருநாள் தனது மகன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளார் வனிதா.

Advertisement

அண்மையில் வனிதா அளித்த பேட்டி ஒன்றில் அவரது மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,அவன் ஆள் தான் வளர்ந்திருக்கிறான்,அறிவு வளரவில்லை நேரில் பார்த்தால் அறைந்துவிடுவேன் என கோபமாக பேசியுள்ளார்.இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் மீது பாசமாக இருந்த வனிதா தற்போது திடீரென கோபமடைய காரணம் என்ன என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in