The Indian Times

டேய் சாப்பிட்றா…யானைக்கு பாசமாக ஊட்டிவிட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது தனது விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.தற்போது அங்குள்ள யானைக்கு வரலட்சுமி உணவு கொடுத்து மகிழ்ந்து யானையுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in