The Indian Times

கொரோனா பாதிக்கப்பட்ட வரலட்சுமிக்கு என்னாச்சு..வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சியாகிய ரசிகர்கள்

பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி .முதல் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை ராதிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இவரது மகள் வரலட்சுமி தற்போது சினிமா உலகை கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக சமந்தாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் நேற்று வரலட்சுமி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.மேலும் தன்னை சந்தித்தவர்களும் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவித்து இருந்தார்.இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த வீடியோவில் தனிமைப்படுத்தலில் இருக்கும் வரலட்சுமி அறைக்குள் பயங்கர சேட்டைகள் செய்து,கட்டிலில் ஏறி குதித்துள்ளார்,இதனை வீடியோவாக பதிவிட்டு தனிமைப்படுத்தலில் நான் இதனை தான் செய்கின்றேன் என பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,என்னாச்சி வரலட்சுமிக்கு இப்படியெல்லாம் செய்கிறார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in