The Indian Times

மறைந்த வடிவேல் பாலாஜி வீட்டிற்குள் நுழைந்த திருடன்… அவருடைய போட்டோவை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா?

விஜய் டி.வி-யில் “அது இது எது”, “கலக்கப்போவது யாரு” என பல காமெடி நிகழ்ச்சிகளில் அச்சு அசலாக வடிவேலுவாக வலம் வந்த பாலாஜி, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் டி.வி., ‘மிஸ் யூ வடிவேல் பாலாஜி’ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜியின் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து விஜய் டி.வி. பிரபலங்கள் பேச உள்ளனர்.

வேப்பம்பட்டு பகுதியில் வடிவேல் பாலாஜிக்கு வீடு உள்ளது. அங்கு திருவிழா நடந்த போது வடிவேல் பாலாஜி உள்ளிட்ட குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு திருவிழாவுக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர்.

Advertisement

ஆனால் அங்கு வடிவேல் பாலாஜியின் போட்டோவை பார்த்த திருடன். அய்யய்யோ… இது வடிவேல் பாலாஜி வீடா..? தெரியாமல் உள்ளே நுழைந்துவிட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, மன்னிப்புக்கேட்டுச் சென்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ஈரோடு மகேஷ் நினைவுகூற பிரபலங்கள் பலரும் கண்ணீர் வீடியோ.

https://twitter.com/i/status/1312633550735253504

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in