The Indian Times

எல்லா படத்தையும் கலந்த மாதிரி இருக்கு…வெந்து தணிந்தது காடு PUBLIC REVIEW

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தனிந்து காடு படத்தில் நடித்துள்ளார்.இது பி. ஜெயமோகன் எழுதியது மற்றும் ஐசரி கே. கணேஷ் தயாரித்தது. சிலம்பரசன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்த நிலையில் தற்போது இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

Advertisement

காலை 5 மணி முதலே 200 திரையரங்குகளில் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் கூறியதாவது,படம் எதிர்பார்த்த அளவு இல்லை,எல்லா படத்தையும் சேர்த்து எடுத்துள்ளது போல உள்ளது.எதிர்பார்ப்புடன் யாரும் படம் பார்க்க வரவேண்டாம் ,படத்தின் இடையே காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் படத்தின் வேகத்தினை குறைத்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in