The Indian Times

வெந்து தணிந்தது காடு,வசூலை பார்த்து எல்லாம் மயக்கம் போடு…கொத்தாக வசூலை அள்ளிய சிம்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள். அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர். 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்

Advertisement

தற்போது சிம்பு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.பி. ஜெயமோகன் எழுதியது மற்றும் ஐசரி கே. கணேஷ் தயாரித்தது. சிலம்பரசன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்த நிலையில் இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisement

இப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் விபரம் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது.அதன்படி தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் முதல் 10 கோடி ருபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.சென்னையில் மட்டும் 95 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது,விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in