இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்தில் நெருங்கிய உறவுகள் மற்றும் திரைபிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்கள் திருமணம் நடைபெறும் இடத்தில 80க்கும் மேற்பட்ட பவுன்சர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் இருந்தனர்.பத்திரிக்கையில் கியூ ஆர் கோடு கொண்டு அனைவரையும் திருமணத்திற்கும் அனுமதித்தனர்.இதனால் ஹோட்டலுக்கு வெளியவே பெரும் கூட்டம் கூடியது.இவர்களின் திருமண வீடியோ நேரிடையாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கல்யாணம் முடிந்த கையோடு கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர்.இதனால் அங்கு கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.மேலும் அங்கு இருவரும் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.அப்பொழுது மாடவீதியில் நடிகை நயன்தாரா செருப்பு அணிந்து சென்றுள்ளார்.அங்கு மக்களுக்கு செருப்பணிய தடை விதிக்கப்பட்டுள்ளது,இருப்பினும் நயன்தாரா செருப்புடன் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.இதனால் கடுப்பாகிய பொதுமக்கள் நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.இந்த விமர்சனம் குறித்து கேள்விப்பட்ட விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்ய விரும்பிய நிலையில் சில காரணங்களால் சென்னையில் நடத்தினோம்.கூட்டம் அதிகமாக வந்ததால் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்ப வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்ததால் நாங்கள் காலணியுடன் நடமாடியதை கவனிக்க தவறிவிட்டோம்.இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளதாக தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.தற்போது இந்த கடிதம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.விக்னேஷ் வெளியிட்ட மன்னிப்பு கடிதத்திற்கு பிறகு இந்த பிரச்னையை நெட்டிசன்கள் முடித்துள்ளனர்.சிலர் விமர்சனம் செய்தாலும் பலர் அவர்கள் தெரியாமல் தான் இதனை செய்திருப்பார்கள் என ஆதரவு தெரிவித்து வந்தனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in