என்ன இப்படி சொல்லிட்டாரு… தனுஷ் படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்..உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு போடாபோடி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை,இருப்பினும் தொடர்ந்து போராடி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இதை தொடர்ந்து சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வர தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  அடி கட்டழகி கருவாச்சி... உன் மேல காதல் வந்து உருவாச்சி... ஜிவி பிரகாஷின் கள்வன் படத்தின் 1st single இதோ

என்ன இப்படி சொல்லிட்டாரு... தனுஷ் படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்..உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் வேலையில்லா பட்டதாரி.இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.ரூ8 கோடியில் உருவாகிய இப்படம் 50 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படத்தில் இறுதி காட்சிகளில் விக்னேஷ் சிவன் நடித்திருப்பார்.இந்த காட்சிகள் நல்ல வரவேற்பினையும் திரையரங்கில் பெற்றது.இதில் நடித்த அனுபவம் குறித்து இவரிடம் பேட்டியின் பொழுது கேட்டதற்கு அவர் கூறியதாவது,எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை,விருப்பம் இல்லாமல் தான் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன்,அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அன்று வரவில்லை என்பதால் தனுஷ் சார் என்னை நடிக்க வைத்தார் என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ரஜினி பட சீனை திருடிட்டு.. சூப்பர்ஸ்டாருனு சொல்லுறீங்களே.. வாரிசை மீம்ஸ் போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்

என்ன இப்படி சொல்லிட்டாரு... தனுஷ் படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்..உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன் 2

விளம்பரம்

அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரூ.60கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக விக்னேஷ் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து நடிகர் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் 62வது படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்திற்கான வேலைகளை தற்போது விக்னேஷ் சிவன் தொடங்கியுள்ளதால் மிக மும்முரமாக வேலை செய்து வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment