The Indian Times

என் கனவு நினைவாகியது… அன்புமழையை விக்னேஷ் சிவன் மீது பொழிந்த மகன்

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகியதாக குறிப்பிட்டுள்ளார்.இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.மேலும் வாடகை தாய் வைத்து குழந்தை பெற பல விதிமுறைகள் இருப்பதாகவும் இவர்கள் விதிமுறைகளை மீறியதாகவும் புகார்கள் கிளம்பியது

Advertisement

இவ்வாறு ஒரு பக்கம் பிரச்சனைகள் இருந்தாலும் அது எதையும் பற்றி விக்னேஷ் சிவன் நயன்தாரா கவலைப்படாமல் தங்களது மகன்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.இந்நிலையில் மகன் தனது மேல் சிறுநீர் கழித்ததை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இதற்குத்தான் இத்தனை ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்ததாக கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in