இன்சூரன்ஸ் இல்லாத காருக்கு தான் இவ்வளவு சீனா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Vijay

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரை இவரது ரசிகர்கள் இளைய தளபதி என்று செல்லமாக அழைப்பது உண்டு. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகனாக எளிமையாக திரைத்துறையில் நுழைந்து விட்டார் என்ற விமர்சனங்கள் ஆரம்பத்தில் இவர் மீது வைக்கப்பட்டாலும், தனது அயராத உழைப்பு மற்றும் நல்ல படங்களை கொடுத்த காரணத்தால் இவர் இன்று உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. இவரது படம் எப்போது வெளியாகும் என்று பல கோடி ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர், அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய்.

இன்சூரன்ஸ் இல்லாத காருக்கு தான் இவ்வளவு சீனா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Vijay 1

விளம்பரம்

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது. விஜய் எப்பொழுதும் தனது படங்களில் சில இடங்களில் அரசியல் பேசுவது உண்டு. கத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை பற்றி அவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே போல் தலைவா படத்தில் அரசியல் உள்ளது என்று சொல்லி அந்த படம் வெளிவருவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்தார் விஜய்.

இன்சூரன்ஸ் இல்லாத காருக்கு தான் இவ்வளவு சீனா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Vijay 2

விளம்பரம்

இந்த சூழலில் கடந்த வருடம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான இடங்களை பெற்றனர். அதை தொடர்ந்து இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காணுகின்றனர். அதனால் இன்று காலையே ஓட்டு போட வந்தார் விஜய். அப்போது விஜய் மாருதி சுசூகி செலிரியோ என்ற சிவப்பு நிற காரில் வந்தார். தற்போது நெட்டிசன்கள் அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என்று தேடி பிடித்து புகைப்படத்தை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த கார் விஜய் பெயரில் 30 மே 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத காரை ஓட்டி வந்த விஜயை இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர். . அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment