The Indian Times

புதியதாக கார் வாங்கிய VIJAYTV பூவையார்.. ரசிகர்கள் மனம்நெகிழ்ந்து வாழ்த்து

விஜய் தொலைக்காட்சி பல திறமைசாலிகளை உலகத்திற்கு அறிமுக படுத்தியுள்ளது.அந்த வரிசையில் வந்தவர் தான் பூவையார்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகம் ஆகியவர் இவர்.சிறுவயதிலேயே ஏழ்மையால் கஷ்டப்பட்ட பூவையர் கிடைத்த வாய்ப்பை தக்க வைக்க போராடினார்.இந்நிகழ்ச்சியில் கானா பாடல் பாடி ஏகப்பட்ட ரசிகர்களை தனது வசம் இழுத்தார் இவர்.இதில் கிடைத்த வரவேற்பு பூவையாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது .

Advertisement

தற்போது மேடை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து அவரது இடுப்பிலேயே அமர்ந்து தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார் பூவையார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக தொடங்கியது.தற்போது படங்கள் நிகழ்ச்சிகள் என மாறி மாறி பூவையார் பிசியாக இருந்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தற்போது பூவையார் புதியதாக கார் வாங்கியுள்ளார்.தனது கடின உழைப்பினால் சிறுவயதிலேயே உயர்ந்து தற்போது கார் வாங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இவரின் வளர்ச்சியினையும் உழைப்பினையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in