தன் அரை சதத்தை மகளுக்கு சமர்ப்பித்த விராட் கோலி ! மனம் குளிர வைத்த அப்பா மகள் பாசம்

விளம்பரம்

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. இதுவரை இந்த சீசனுடைய 12 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் , இரண்டாவது இடத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும் , மூன்றாவது இடத்தில் டெல்லி அணியும் உள்ளது. வழக்கம் போல் எல்லா ஐ.பி.எல்லிலும் நடக்கும் நிகழ்வுகளாக இல்லாமல் இந்த ஐ.பி.எல் தொடரில் சில ஆச்சரியங்களும் அவ்வப்போது நடக்கின்றது.

இப்போது டிரெண்டிங்   நடு ரோட்டில், சிக்னலில் காரின் கண்ணாடியை உடைத்த ராகுல் டிராவிட்!

தன் அரை சதத்தை மகளுக்கு சமர்ப்பித்த விராட் கோலி ! மனம் குளிர வைத்த அப்பா மகள் பாசம் 1

விளம்பரம்

அதில் பெங்களூரு அணி இது வரை ஆடிய 4 போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில உள்ளது. எப்போதுமே புள்ளி பட்டியலில் முதல் இடத்தில சென்னை அல்லது மும்பை அணி இடம்பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பெங்களூரு அணி முதல் இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று நடந்த பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. அப்போது டாஸ் வென்ற பெங்களூரு அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 177 ரன்களை முடித்திருந்தது.

இப்போது டிரெண்டிங்   ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக புதிய மைல்கல்லை எட்டும் தல தோனி

தன் அரை சதத்தை மகளுக்கு சமர்ப்பித்த விராட் கோலி ! மனம் குளிர வைத்த அப்பா மகள் பாசம் 2

178 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அதில் முதலில் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் விளாசினார். அவர் தன் அரைச்சதை நிறைவு செய்தபோது அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்திய காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment