The Indian Times

இயக்குனர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகை மீது தாக்குதல்…. பஞ்சாயத்தாகிய வணங்கான்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களிள் ஒருவர் பாலா. இவரின் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமை வைத்து, சேது படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட் அடித்து நல்ல பெயறையும் பல விருதுகளை தட்டிச்சென்றது. தன் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் பாலா. இவருக்கு மட்டுமில்லாமல் நடிகர் விக்ரமுக்கும் இப்படம் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார்.

Advertisement

பின் நடிகர் சூரியாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. பின் பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் படங்களை இயக்கி பல வருதுகளை குவித்தார். ஆனால் நாச்சியார், தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. பிறகு, தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்று ரீமேக் செய்தார். இதில் நடிகர் விக்ரமின் மகன் த்துரூவ் விக்ரமை வைத்து இயக்கினார். இந்த படம் ஓ.டி.டி யில் வெளியானாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

Advertisement

பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். கன்னியாகுமரி பகுதிகளில் மும்முரமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது.இந்நிலையில் திடீரென சூர்யா இப்படத்தினை விட்டு விலகினார்.இப்படத்தில் அவருக்கு பதில் நடிகர் அருண் விஜயை வைத்து படம் இயக்கப்பட்டு வருகிறது.இப்படத்தில் நடிக்க வந்த துணை நடிகைகளுக்கும் அவர்களின் ஒருங்கிணைப்பாளருக்கும் சம்பளம் குறித்து எழுந்த பிரச்னையில் துணை நடிகை ஆன லிண்டாவை ஒருங்கிணைப்பாளர் தாக்கியுள்ளார்.இதனால் காயமடைந்த லிண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in