இடிந்த கட்டடங்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாட்டம்.
இஸ்ரேல் நாட்டில் கடந்த சில நாட்களாக போர் வெடித்த வந்த நிலையில் தற்போது அமைதி நிலை நிலவி வருகிறது. இருந்தும் அமைதி நிலை திரும்ப வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் காசா சிறுவன் தன் பிறந்த நாளை அந்த சரிந்த இடிந்து கிடக்கும் கட்டிடங்களுக்கு நடுவே பிறந்த நாள் கொண்டாடும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அந்த நாட்டின் பலஸ்தீன அமைப்புக்கு எதிராக நடத்திய தாக்குதலில் பல்வேறு மக்கள் அங்கிருந்து வெளியேறினர். மேலும் பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பை இழந்தனர். மேலும் 200 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.
கடந்த மே 10 தேதி முதல் தொடங்கிய இந்த தாக்குதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. ஆனால் தற்போது இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டு அமைதி நிலவி வருகிறது. இதுவும் தற்காலிமாக தான் இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.மக்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அந்த நாட்டின் அரசு என்ன முடிவு எடுக்கும் என்றும் அந்த நாட்டின் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in