நெருப்பை அணையாமல் பாதுகாப்பார்களா? பாவ்ணிக்கும் மதுவுக்கும் நேர்ந்த சோதனை!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸின் தாக்கத்தை நாம் நன்கு அறிவோம்! கடந்த நான்கு சீசன்களாக மக்களை பெரிதும் கவர்ந்து டிஆர்பியில் விஜய் தொலைகாட்சியை மேலேற்றிய பிக்பாஸின் ஐந்தாவது சீசன், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க விஜய் தொலைகாட்சியில் படு-ஜோராக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
நெருப்பை அணையாமல் பாதுகாப்பார்களா? பாவ்ணிக்கும் மதுவுக்கும் நேர்ந்த சோதனை! 1

விளம்பரம்

“டாஸ்க்கு மேலே டாஸ்க்கு வந்து அவர்களை கொதிக்க வைக்குற நேரமிது”
டாஸ்க்குகளை கொடுத்து கொடுத்து போட்டியாளர்களின் உணர்வை மாற்றும் வெளிப்படுத்தும் பிக்பாஸின் நோக்கம் இந்த சீசனை பொறுத்தவரை நேற்றுதான் ஆரம்பித்துள்ளது. கியரை மாற்றியதன் பலனை விஜய் டிவி நேற்று உணர்ந்திருக்கும்.

அத்தனைக்கும் மேலாக சுருதி, பாவ்ணி மற்றும் தாமரைக்கு இடையில் நேர்ந்த கலவரத்தை நேற்று பார்க்க முடிந்தது. சக போட்டியாளர்கள் நியாயம் கேட்பதற்காக இறங்கியதையும் பார்க்க முடிந்தது. சிபி, ராஜூ, அண்ணாச்சி போன்றவர்கள் பேசியதையும் காண முடிந்தது. சுருதி ஒன்று கூற தாமரை ஒன்று கூற போட்டியாளர்கள் ஒன்று கூற என எது அக்மார்க் உண்மை என்பது உள்ளிருப்பவர்களுக்கே தெரியவில்லை. இதை தெரிவிக்கும் பொருட்டு பிக்பாஸின் மிக முக்கியமான வித்தையான குறும்படத்தை பிக்பாஸ் இந்த வார இறுதியில் ஒளிபரப்புவார் என்ற எதிர்பார்ப்பை நேற்றைய நிகழ்ச்சி அதிகபடுத்தியுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில்தான் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டம் மூன்று வெளிவந்துள்ளது. இப்போதெல்லாம் முன்னோட்டத்திற்கான (promo) மவுசு ஏறிவிட்டதாக தொலைக்காட்சி நிறுவனம் கருதிவர அதிக வாய்ப்பிருக்கிறது. ஆமாம்! வருகிற முன்னோட்டத்தின் தரமும் காட்சியும் அப்படிதானே இருக்கின்றன

ஊரைவிட்டு ஊரு வந்த டாஸ்க்கில் பெரிதும் சோபிக்காதவர்களில் பாவ்ணியும் மதுவும் நாமினேட் செய்யப்பட்டனர். இரவு முழுவதும் தீயை அணையாமல் பாதுகாக்க பிக்பாஸ் கூற தீயை அணையாமல் பாதுகாப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment