The Indian Times

பராசக்தி படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.

தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்.

Advertisement

இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.

கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.அதன்படி தற்போது இவருக்கு அமரன் படம் ஹிட் அடித்துள்ளது.இவர் தற்போது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் புதியப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in