இயக்குனர் நடிகர் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர் எஸ்ஜே சூர்யா.இவர் தற்போது படங்கள் இயக்குவதை ஓரம்கட்டிவிட்டு படம் நடிப்பதில் களம் இறங்கி விட்டார்.தற்போது பல படங்களில் கமிட் ஆகி தொடர்ந்து நடித்து வருகிறார்.ஹீரோ,வில்லன்,போலீஸ்,துணை கதாபாத்திரங்கள் என அனைத்திலும் கால் தடம் பதித்துவிட்டார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் டான் படம் உருவாகியுள்ளது.இப்படத்தினை அறிமுக இயக்குனர் சிபி இயக்கி தயாரித்துள்ளார்.பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.லைக்கா நிறுவனமும் இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளது.இப்படம் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் நடிகர் எஸ்,ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது
இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டிக்காக முன்னணி நிறுவன சேனலில் கலந்துகொண்ட எஸ்ஜே சூர்யா.நடிகர் விஜய் இடத்தை சிவகார்திகேயன் பிடித்துவிட்டதாக சேனல் கூறியது.இதற்கு விஜய் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பி எஸ்ஜே சூர்யாவை விஜய் ரசிகர்கள் சுற்றிக்கொண்டு எவ்வாறு இப்படி கூறலாம் என வசைபாட ஆரம்பித்துவிட்டனர்.இதனால் கடுப்பாகிய நடிகர் எஸ்ஜே சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் இதற்கான விளக்கத்தினை வெளியிட்டுள்ளார்,அதில் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விஜய்க்கு தனி இடம் கொடுத்துள்ளனர் அதுபோல் தான் சிவகார்த்திகேயனுக்கும் கொடுத்து வருகின்றனர் என்று தான் கூறினேன்,நான் இந்த தலைப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என அந்நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
“ Every families in Tamil Nadu given a special place to @actorvijay sir and to @Siva_Kartikeyan sir “ this is what I told …. I didn’t expect such a caption from @CinemaVikatan 🙄🙄🙄 https://t.co/tyhbXfCZVE
— S J Suryah (@iam_SJSuryah) April 29, 2022
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in