The Indian Times

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. பட்டு சேலையில் கலக்கும் நடிகை பூமிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா.இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடிக்க தொடங்கி முன்னணி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வலம் வர தொடங்கினார்.

Advertisement

இவர் தமிழ் படத்தில் மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளத்திலும் படம் நடித்துள்ளார்.

தற்போது கதாநாயகியாக இல்லாமல் சினிமாக்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.தமிழில் இவர் நடிப்பில் வெளியாகிய யு டர்ன் படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ரோஜா கூட்டம் படத்தில் இடம் பெற்றுள்ள ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்ற பாடல் இன்று வரை பிரபலமாக உள்ளது.

மேலும் சூர்யாவுக்கு கதாநாயகியாக நடித்து வெளியாகிய சில்லுனு ஒரு காதல் திரைப்படமும் தற்போதுவரை பலரின் சிறந்த படமாக அமைந்துள்ளது.

இவருக்கு திருமணமாகி மகன் ஒருவர் உள்ளார்,திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் பூமிகா.

Advertisement

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in