எங்க அம்மாட்ட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னேன்… நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

எங்க அம்மாட்ட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னேன்... நடிகை மீனா 1

விளம்பரம்

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.பெண் குழந்தையுடன் மீனா செய்வதறியாது கணவர் இறுதி சடங்கில் நிற்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.தற்போது கணவர் இறப்பில் இருந்து மீண்டு வரும் மீனா,தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி வெளியே சென்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

எங்க அம்மாட்ட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னேன்... நடிகை மீனா 2

விளம்பரம்

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது.இந்த பேட்டியில் அவர் கூறியதாவது,நான் ரித்திக் ரோஷன் திருமணத்திற்கு சென்றேன் எனக்கு மனது உடைந்து விட்டது.அவர் என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும்.எங்க அம்மாகிட்டையே மாப்பிள்ளை ரித்திக் ரோஷன் மாதிரி பாருங்கன்னு சொல்லிருக்கேன் என விளையாட்டுத்தனமாக கூறி சிரித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு மீனாவிற்கு என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : CINE ULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment