The Indian Times

தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை மேகா ஆகாஷ் புகைப்படங்கள்

“லை” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் மேகா ஆகாஷ்.

அதன்பின்னர் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

Advertisement

அதன்பின்னர் தனுஷுக்கு கதாநாயகியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படத்தினை தொடர்ந்து ஹிந்தியிலும் அறிமுகம் ஆகி உள்ளார்.சேட்டிலைட் சங்கர் என்ற ஹிந்தி படத்தில் நடித்ததின் மூலம் ஹிந்தியிலும் களம் இறங்கி இருக்கிறார்.

தற்போது இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவரின் புகைப்படத்தினை காணவே ஒரு ரசிகர்கள் கூட்டம் சுற்றி வருகிறது.

தற்போது இவர் காதலனை திருமண நிச்சயம் செய்து உள்ளார். மேலும் தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்து உள்ளார் மேகா.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in