The Indian Times

குடும்பத்துடன் நடிகை நயன்தாரா பாரிஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகை நயன்தாரா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை சினிமாவில் ஏற்படுத்தியது.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படம் நயன்தாராவுக்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியது. பல வெற்றிப்படங்களில் நயன்தாரா நடித்தும் உள்ளார்.

Advertisement

தற்போது தமிழ் சினிமாவை லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த இவர், பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. ஆயிரம் கோடி வசூலை பெற்ற இப்படம் இவருக்கு பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர் குடும்பத்துடன் பாரிஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Pouchepparadj Raj — 26/12/2024

Lik you’re families mam your Son’s so Kurt