அகிலன் – திரைவிமர்சனம் (?/5)

நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் அகிலன் படத்தில் நடித்துள்ளார்.முதல் நாள் இதே இயக்குனருடன் கைகோர்த்து பூலோகம் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியது.அகிலன் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. இன்று இப்படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தின் விமர்சனத்தினை கீழே காணலாம்

அகிலன் - திரைவிமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

கபூர் என்பவர் இந்திய பெருங்கடல் வழியாக அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்து வருகிறார்.இவருக்கு கீழ் வேலை செய்பவர் தான் பரந்தாமன்.இந்த பரந்தாமனின் அடியாளாக வருகிறார் அகிலன் ஜெயம் ரவி.பரந்தாமனுக்காக பல கொலை ,கொள்ளை மற்றும் கடத்தல் என பலவற்றையும் செய்து வருகிறார்.ஜெயம் ரவி தலைவன் கபூரை எப்படியாவது பார்க்க வேண்டும் என பல கடத்தல் வேலைகளை திறமையாக செய்து வருகிறார்.அவ்வாறு கபூரை பார்க்கும் ஜெயம் ரவிக்கு மிகவும் ஆபத்தான வேலை ஒன்று கிடைக்கிறது,இந்த வேலையே செய்து முடிப்பவனே இந்திய பெருங்கடலின் ராஜா என அறிவிக்கிறார் கபூர்.இந்த காரியத்தை கையிலெடுக்கும் ஜெயம் ரவி,இதில் சாதித்தாரா?இந்திய பெருங்கடல் ராஜா ஆகினாரா?இதன் மூலம் அவர் இழந்தது என்ன இறுதியில் என்னாகியது என்பதே படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

அகிலன் - திரைவிமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

ஜெயம் ரவி தனது நடிப்பால் முழு படத்தினையும் தங்கியுள்ளார்.இந்த முறை நெகட்டிவ் ரோலில் நடித்து மக்களை அதிகம் கவர்ந்துள்ளார் ஜெயம் ரவி.படத்தில் கதாநாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் நடிப்பு சுமார் என்று தான் சொல்லவேண்டும் மேலும் தான்யா ரவிச்சந்திரன் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று கேட்பது போல உள்ளது.முக்கிய வில்லனாக வரும் தருண் அதற்காக உழைக்கவில்லையோ என்ற உணர்வை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறார்.மீதமுள்ள நடிகர்கள் தங்களுக்கான நடிப்பினை சரியாக செய்துள்ளனர்.அருமையான கதையை எடுத்த கல்யாண கிருஷ்ணன் அதை இயக்கத்தில் தவறவிட்டு விட்டார் என்று தான் கூற வேண்டும்.முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லாதது பெரும் சோகம்.சாம் சி எஸ் பாடல்கள் படத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை,பின்னணி இசை படத்தில் பக்காவாக அமைந்துள்ளது.திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக உருவாகியிருக்கலாமோ என்று தோன்றுகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

அகிலன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment