எங்களுக்கு பையன் பிறந்து இருக்கான்..மகிழ்ச்சி வெள்ளத்தில் சஞ்சீவ், ஆல்யா | Alya Manasa 2nd baby

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும் நடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் இருவரையும் தூண்டிவிட, ரசிகர்களின் கோரிக்கைபடி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா சையத் என்று அழகான மகளும் உள்ளனர். ஐலா பார்ப்பதற்கே பொம்மை போல இருப்பார். அவர் அழகாக அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதை சஞ்சீவ் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். ஐலா செய்யும் குறும்புத்தனங்களை பார்க்கவே மிக அழகாக இருக்கும். அந்த சேட்டைகளை பார்க்க பல ரசிகர்கள் உண்டு.

எங்களுக்கு பையன் பிறந்து இருக்கான்..மகிழ்ச்சி வெள்ளத்தில் சஞ்சீவ், ஆல்யா | Alya Manasa 2nd baby 1

விளம்பரம்

ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். தனது இரண்டாம் குழந்தையின் பிரசவ தேதி மார்ச் கடைசி வாரத்தில் இருக்கும் எனக்கூறி இருந்தார். பிள்ளைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் கேட்ட கேள்விக்கு குழந்தை பையனாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண்ணாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்க உள்ளதாக கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.அதில் சஞ்சீவ் தனது மனைவிக்கு வளையல் அணிவித்து நலங்கு வைக்கும் வீடியோ பார்க்க மிக அழகாக இருந்தது. பிரம்மாண்டமாக நடந்த அந்த விழாவிற்கு பலரும் வந்து ஆல்யாவை வாழ்த்தி இருந்தனர். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

எங்களுக்கு பையன் பிறந்து இருக்கான்..மகிழ்ச்சி வெள்ளத்தில் சஞ்சீவ், ஆல்யா | Alya Manasa 2nd baby 2

விளம்பரம்

தற்போது ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர் ஏற்கனவே கூறியது போல அர்ஷ் பிறந்துள்ளார். இதை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் தாயும் நலமாக உள்ளார்கள். உங்கள் blessingக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஐலா பாப்பாவிற்கு அழகான தம்பி பாப்பா பிறந்துள்ளான் என்று ஆல்யா சஞ்சீவ் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment