The Indian Times

மீண்டும் அமீருடன் இணைந்து நடனம் ஆடிய பாவனி…. பிக்பாஸ் கொண்டாட்டம்.. | Bigg Boss Kondattam

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் பாவ்னி! விஜய் டிவியில் சின்னதம்பி சீரியலில் ஆரம்பித்த இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். மலையாளம், மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், பிக் பாஸ் வீட்டிலும் இவர் சந்திக்காத மன உளைச்சலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்! Youtube Video Embed Code Credits: Vijay Televison

Advertisement

இவரிடம் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அமீர் காதலிப்பது போன்ற விளையாட்டை நடத்தினார். ஆனால் பாவனி தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்ற பதிலுடன் முடித்து கொண்டனர். அவர்கள் சமீபத்தில் ஒரு youtube சேனலில் கொடுத்த பேட்டி வைரல் ஆனது. தற்போது அவர்கள் இருவரும் இணைந்து பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடனம் ஆடினர். அந்த பாடல் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. Cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in