The Indian Times

முதல் வெளியேற்றம் இவருதானா? பிக்பாஸ் ஹவுஸ்-ல் நடக்க உள்ள முதல் எலிமினேஷன்.. வெளியான அதிகாரபூர்வமற்ற தகவல் | Abinay | Bigg Boss Ultimate

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits: Behindwoods TV

Advertisement

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் ஆரம்பித்து 1 வாரம் கடந்து விட்ட நிலையில் இந்த வாரம் கமல்ஹாசன் எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்பவுமே பிக்பாஸ் ஆரம்பித்து முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. அனால் பிக்பாஸ் அல்டிமேட் 70 நாள் நிகழ்ச்சி என்பதால் முதல் வாரமே வெளியேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடைசி 3 இடத்தில் இருப்பது வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அபிநய். இதில் வனிதா மற்றும் சுரேஷ் கொடுக்கும் கன்டென்ட்-ஆல் தான் பிக்பாஸ் விறுவிறுப்பாக போய் கொண்டுள்ளது. எனவே அபிநய் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற்றபடுவார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in