என்னது அரண்மனை 4-ஆ.. அதுவும் இந்த முன்னணி ஹீரோவா… முடிவு செய்த சுந்தர் சி

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான்.

கட்டாயம் படிக்கவும்  படம் சர்வதேச தரமா இருக்கு... விடுதலை படத்தை பாராட்டிய தள்ளிய BLUESATTAI மாறன்

என்னது அரண்மனை 4-ஆ.. அதுவும் இந்த முன்னணி ஹீரோவா... முடிவு செய்த சுந்தர் சி 1

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சுந்தர் சி மீண்டும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தினை இயக்க முடிவு செய்துள்ளாராம்.

கட்டாயம் படிக்கவும்  வாய் இருந்தா தானே இனி பேசுவே... வாயை கிழித்த AGR... பத்துதல SNEAK PEEK வீடியோ

என்னது அரண்மனை 4-ஆ.. அதுவும் இந்த முன்னணி ஹீரோவா... முடிவு செய்த சுந்தர் சி 2

அதுவும் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படத்தில் 4 கதாநாயகிகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.பழைய பாகங்களை போல இல்லாமல் இந்த பாகத்தில் புதிய விஷயங்களை சுந்தர் சி மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து கேள்வி பட்டதும் ரசிகர்கள் சுந்தர் சியை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்,மறுபடியும் முதலில் இருந்தா,இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என கேலி செய்து வருகின்றனர்.

Leave a Comment