எங்ககிட்டியேவா..? – அத்தனை பேரையும் வச்சி செஞ்ச அஸ்வின் – வைரல் ட்வீட்

ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபார வெற்றியைப் பெற்றுள்ளனர். கப்பா மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கைப்பற்றியதன் மூலம் 2-1 என்ற விகிதத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

எங்ககிட்டியேவா..? - அத்தனை பேரையும் வச்சி செஞ்ச அஸ்வின் - வைரல் ட்வீட் 1

விளம்பரம்

இதுவரை ஆஸ்ட்ரேலியாவில் உள்ள கப்பா மைதானத்தில் எந்த அணியும் 35 வருடமாக ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியதாக வரலாறு இல்லை. ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றது வரலாற்றில் இடம்பெறும் விதமாக அமைந்துள்ளது.

இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது தொடர் சிட்னியில் உள்ள மைதானத்தில் இந்திய அணியை ஆஸ்ட்ரேலியா அணியின் கேப்டன் டிம் பெயின் கோபத்தை சீண்டும் வகையில் பேசியது இந்திய அணியினரின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது.

விளம்பரம்

எங்ககிட்டியேவா..? - அத்தனை பேரையும் வச்சி செஞ்ச அஸ்வின் - வைரல் ட்வீட் 2

குறிப்பாக அஷ்வினை அடிக்கடி வம்புக்கு இழுத்து வந்தார். அந்த தருணத்தில் நீங்கள் கப்பாவிற்கு வாங்கள் பார்த்து கொள்ளலாம் என்று சொன்னது மிக இந்தியாவை பார்த்து சவால் விடும் விதமாக அமைந்தது. அதற்கு அஸ்வின் அதுதாண்டா உங்களுக்கு கடைசி போட்டி என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

விளம்பரம்

இதையடுத்து அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் டிம் பெய்னை கிண்டல் செய்யும் வகையில் டிவிட் ஒன்றை பதிவு செய்து அதில் டிம் பெய்னை டாக் செய்து இருக்கிறார்.

எங்ககிட்டியேவா..? - அத்தனை பேரையும் வச்சி செஞ்ச அஸ்வின் - வைரல் ட்வீட் 3

விளம்பரம்

அதில் கப்பாவில் இருந்து அனைவருக்கும் மாலை வணக்கம். என்னுடைய பங்களிப்பு கப்பா மைதானத்தில் இல்லாததற்கு மன்னிக்கவும். கடைசி போட்டியை கப்பாவில் நடத்தியதில் மிக்க நன்றி. இதை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment