The Indian Times

செழியன் விஷயத்தில் எழில் செய்த தவறால் கடுப்பாகிய பாக்கியா… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது செழியன் மாலினி உடன் நெருங்கி பழகி வருகிறார்,அவர் தவிர்க்க நினைத்தாலும் மாலினி செழியனை விடாமல் துரத்துகிறார்.ஏற்கனவே வீட்டில் அப்பா கோபி செய்த வேலை காணாது என மகன் செழியனும் ஆரம்பித்துள்ளார் மேலும் மாலினி உண்மையை வீட்டில் கூறிவிடுவேன் என கூறி செழியனை மிரட்டியும் வருகிறார்.செழியன் என்னை ஏமாற்றிவிட்டான்,என பாக்கியாவிடம் கூறுகிறார்,இருப்பினும் பாக்கியா என் மகன் இனி உன் பக்கம் வரமாட்டான் என கூறுகிறார். அதையும் மீறி மாலினி பாக்கியாவின் வீட்டிற்கு வந்து கத்தி கூச்சலிட்டு செழியனை அழைக்கிறார்,மாலினி கோவமடைவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் செழியன்,மேலும் தனக்கும் செழியனுக்கும் இடையே உள்ள வரவை ஜெனியிடம் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்,இதனால் ஜெனி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

ஜெனிக்கும் செழியனுக்கும் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் செழியன் உடன் ஜெனியை காரில் எழில் அனுப்பி வைக்கிறார்.ஜெனியை காணவில்லை என்றால் அவரின் அப்பாவிற்கு அதிக கோவம் வரும் என்பதால் பாக்கியா செய்வதறியாமல் பதறி இருக்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in