ஷிவானிக்கு ஜோடியாக நடிக்கும் பாலாஜி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 ன் ஃபைனல் தொடர்ந்து இப்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 17 தேதி முடிந்த இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதை எல்லாத்தையுமே மறந்து விட்டு அந்த வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

ஷிவானிக்கு ஜோடியாக நடிக்கும் பாலாஜி - மகிழ்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆரி, சனம், அனிதா, ரியோ, ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. இவர்களை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இவருக்கு ஜோடி ஷிவானி என்று கூறப்படுகிறது.

ஷிவானிக்கு ஜோடியாக நடிக்கும் பாலாஜி - மகிழ்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

கடை குட்டி சிங்கம் என்ற நாடகத்தில் ஷிவானி நடித்து வந்தார். பின் அதிலிருந்து பாதியிலேயே நின்று விட்டார். இப்போது இதில் ஷிவானி மீண்டும் நடிக்க வருகிறார் என்று கூறப்படுகிறது. இதில் பாலாஜி முருகதாஸ் தான் ஜோடி என்று அந்த குழு தரப்பில் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிவானிக்கு ஜோடியாக நடிக்கும் பாலாஜி - மகிழ்ச்சியில் ரசிகர்கள் 3

விளம்பரம்

ஏற்கனேவே இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் பல வதந்திகளை சந்தி்த்து விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மீண்டும் இணைகிறார்கள். மேலும் இந்த, வாய்ப்பை பாலா ஏற்பாரா இல்லையா என்பது பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

ஷிவானிக்கு ஜோடியாக நடிக்கும் பாலாஜி - மகிழ்ச்சியில் ரசிகர்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment