The Indian Times

வலிமை மொத்த வசூலை 14 நாட்களில் தட்டி தூக்கிய பீஸ்ட்!! பீஸ்ட் Full collection report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய்.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தளபதிக்கு ரசிகர்கள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

சன் பிக்சர் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது.வெளியான நாள் முதலே படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் தளபதி ரசிர்களை இப்படம் மகிழ்விக்க தவறவில்லை என்று தான் கூற வேண்டும் அதன்படி உலகம் முழுவதும் இப்படம் ரூ.235 கோடி வசூல் பெற்று,250கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது.வலிமை படம் வெளியாகி இதுவரை மொத்தமாக 234 கோடி மட்டும் பெற்ற நிலையில் தற்போது பீஸ்ட் அந்த வசூலை 14 நாட்களிலேயே பெற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement

படம் வெளியாகி 14 நாட்களில் ரூ.235கோடி வசூல் படைத்துள்ளது என்றால் அதுதான் தளபதி எனப்படும் மந்திரம் ஆகும்.தற்போது இதனை இப்படத்தின் இயக்குனர் நெல்சனே உறுதி செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in