இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகிய படம் கைதி.இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்தார்.இப்படம் தீபாவளிக்கு தளபதி விஜயின் பிகில் படத்துடன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது,மேலும் வசூலையும் அள்ளிக்குவித்தது.இப்படம் லோகேஷ் கனகராஜ் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது.இதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகர் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகர் அஜய் தேவ்கன் பெற்றார்.அவரே இப்படத்தினை இயக்கி தயாரித்து மேலும் கதாநாயகனாக நடித்தும் உள்ளார்.ஹிந்தியில் இப்படத்திற்கு போலா என பெயரிடப்பட்டுள்ளது
தற்போது இன்று இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த டீசர் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஆனால் தமிழ் ரசிகர்களை கைதி அளவுக்கு பெரிதும் ஈர்க்கவில்லை என்று தான் கூற வேண்டும்,படத்தினை முழுவதுமாக அஜய் தேவ்கன் மாற்றியுள்ளார் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இசையமைப்பாளர் ரவி பசுரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Embed video credits : AJAY DEVGAN Ffilms
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in