விக்ரம் படத்தின் மூலம் பிரபலம் ஆகியவர் தான் மாயா கிருஷ்ணன்.இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.இவருடைய முழு பெயர் மாயா சுந்தர கிருஷ்ணன், சினிமாவிற்காக அதை சுருக்கி மாயா எஸ் க்ரிஷ்ணன்னு மாத்திக்கிட்டாரு.
இவர் நடிகர் ஆக மட்டுமில்லாமல் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்,சிங்கர்,டான்சர் மற்றும் ஸ்போர்ட்ஸ் என பல திறமைகளை தனக்குள்ள வச்சிருக்காங்க மாயா.
சென்னைக்கு தனியா வந்த இவர் பல இடங்களிலும் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சாரு,அப்படி இவர் தேடுனதுக்கு பலனாக கிடைச்சது தான் ஜேம்ஸ் வசந்த் இயக்கத்துல வெளியாகிய வானவில் வாழ்க்கை படம்.
இந்த படத்துல நடிச்சு சினிமாவுல அறிமுகம் ஆகினாங்க மாயா.படத்திற்கு தேவைப்படும் என்பதால் பையன் போல முடி வெட்டுன இவங்களுக்கு அதுவே அடையாளம் ஆகிட்டு.
இப்படத்தினை தொடர்ந்து 2.0, மகளிர் மட்டும்,சர்வர் சுந்தரம்,துருவ நட்சத்திரம், வேலைக்காரன் போன்ற படங்களிலும் நடிச்சிருக்காங்க
பின்னர் விக்ரம் படம் வாய்ப்பு வந்த நிலையில் மாயா எல்சியு வில் இணைந்திருக்கிறார்,லியோ படத்தில் சில காட்சிகளில் வருகை தந்து கலக்கியுள்ளார்.
இவர் நடிகை மட்டுமில்லாமல் ஹாஸ்பிடலில் கோமாளி வேஷம் போட்டும் மக்களை சிரிக்க வச்சிக்கிட்டு வருகிறார்.
தீராத நோய் இருப்பவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்விப்பதே இவரின் வேலை,இவர் அப்படி ஹாஸ்பிடலில் நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் இவருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in