திடீரென வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ்.. நடந்தது இதுதான்.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிருந்து திடீரென விலகிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி. பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் சுரேஷ் சக்கரவர்த்தி. இவரை பயங்கரமான போட்டியாளர் என்று தான் சொல்ல வேண்டும். தன் வயதையும் பொருட்படுத்தாமல் கடுமையாக விளையாடுவார். அதே சமயம் அவர் கொளுத்தி போடுவதிலும் வல்லவர். எதையாவது காமெடியாக சொல்கிறேன் என்ற பெயரில் சொல்லி சண்டையை ஆரம்பித்துவிடுவார். இவர் பிக்பாஸில் வீட்டின் உள்ளே இருக்கும் போதெல்லாம் இவர் முகம் ஒரு முறையாவது ப்ரோமோவில் வந்துவிடும். அனிதா சம்பத்க்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.

திடீரென வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ்.. நடந்தது இதுதான்.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate 1

விளம்பரம்

சீசன் 4ல் இவர் கலந்து கொண்ட போது கேபியை தலைவராக்க தனியாளாக இவர் கேபியை தனது தோளில் சுமந்து நின்றார். அந்த ப்ரோமோ வெளியான பிறகு சுரேஷின் மதிப்பு உயர்ந்தது. ஆனால் சீசன்4ல் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு யூடிப்பில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவரும் ஷூட்டிங்கை காரணம் காட்டி நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார். ஆனால் அவர் வெளியேறிய ஒரு வாரத்திலேயே ஷூட்டிங் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்தது. இதை காரணம் காட்டி வனிதாவும் வெளியேறினார். YouTube video code embed credits: Mr. Pravin Footage

திடீரென வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ்.. நடந்தது இதுதான்.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate 2

விளம்பரம்

வனிதா வெளியேறிய பிறகு இந்த நிகழ்ச்சி தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், போட்டியாளர்கள் சிலர் செய்யும் தவறான விஷயங்களால் தான் கமல் விலகினார் என்ற குற்றச்சாட்டையும் அவர் வைத்தார். பிறகு சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வனிதா வெளியேறிய பின்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கருதி சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் பிக்பாஸ் வைல்ட் கார்ட் ஆக கொண்டு வந்தார். ஆனால் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியும் உடல்நிலையை காரணம் காட்டி பிக்பாஸ் வீட்டிலிருந்து தானாக முன்வந்து வெளியேறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

https://youtu.be/7xhoaK3IK7M

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment