சீசன் 3ல் இருந்து வைல்ட் கார்டு ஆக களம் இறங்க உள்ள பிரபலம்?? யாருனு Guess பண்ணுங்க | BiggBoss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் 52 நாட்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியளார்களை வைத்து புதுவிதமான நிகழ்ச்சியை தொடங்கியது பிக்பாஸ் டீம். இது வழக்கமாக டிவியில் ஒளிபரப்பானது போல் அல்லாமல் 24 மணி நேரமும் வகையில் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்படுகிறது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பேரை மட்டுமே வைத்து ஆரம்பிக்கப்பட்டது. வனிதா, பாலாஜி முருகதாஸ், ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன், அனிதா சம்பத், தாமரை, நிரூப், ஸ்ருதி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, அபினய், சுஜா வருணி என இந்த டீமை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சீசன் 3ல் இருந்து வைல்ட் கார்டு ஆக களம் இறங்க உள்ள பிரபலம்?? யாருனு Guess பண்ணுங்க | BiggBoss Ultimate 1

விளம்பரம்

ஆனால் ஆரம்பித்த நாள் முதலே எதாவது சண்டை, சர்ச்சரவு, ஆபாச பேச்சுகள், இரட்டை அர்த்தம் பேச்சுக்கள் என பார்வையாளர்களை கடுப்பேற்றி கொண்டிருந்தனர் ஹவுஸ்மேட்ஸ். இந்த நிலையில் திடீரென கமல் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து வனிதாவும் விலகினார். இன்று உடல் நிலையை காரணம் காட்டி சுரேஷம் விலகியுள்ளார். தொடர்ந்து ஆட்கள் விலகி வரும் சூழலில் வைல்ட் கார்டாக யாரும் எதிர்பாராத விதமாக ரம்யா பாண்டியன் சதீஷை களம் இறக்கியது பிக்பாஸ் டீம். சுவாரஸ்யம் நாளுக்கு நாள் குறைவாக இருப்பதால் புது புது ஆட்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது பிக்பாஸ் டீம். Youtube video code embed credits: Indiaglitz

சீசன் 3ல் இருந்து வைல்ட் கார்டு ஆக களம் இறங்க உள்ள பிரபலம்?? யாருனு Guess பண்ணுங்க | BiggBoss Ultimate 2

விளம்பரம்

அந்த வகையில் ஓவியா, பரணி இருவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த வாரம் புதியதாக ஒருத்தரை களத்தில் இறக்கிவிட திட்டமிடப்பட்டுள்ளது பிக்பாஸ் டீம். ஏற்கனவே சீசன் 3ல் இருந்து லாஸ்லியா கலந்து கொள்வார் என்று வதந்தி கிளம்பிய நிலையில் அவரும் கலந்து கொள்ளவில்லை. தற்போது அதே சீசனில் இருந்து சாண்டி மாஸ்டர் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொள்வார் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. பொதுவாக பிக்பாஸில் 50 நாட்களை கடந்த பின்பு தான் வைல்ட் கார்டை அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் கண்டிப்பாக வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment