The Indian Times

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நடையை கட்டிய அடுத்த போட்டியாளர்… இவரா கடைசி வரைக்கும் வந்து WASTE பண்ணிட்டாரே

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.ஒவ்வொருநாளும் போர்க்களமாக மாறி வருகிறது பிக் பாஸ் வீடு. இந்த போர் தற்போது முடிவுக்கட்டத்தினை எட்டியுள்ளது. 

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை வீட்டில் இருந்து 15 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

Advertisement

தற்போது 5 போட்டியாளர்கள் மட்டும் இறுதி போட்டியில் உள்ள நிலையில் தற்போது பண மூட்டையை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.விருப்பம் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என கூறினார்.அதன்படி அந்த பண மூட்டையை கதிர் எடுத்துக்கொண்டு வெளியேறினார். தற்போது அதே போல பண பெட்டியை கொடுத்துள்ளார் அதை தற்போது அமுதவாணன் அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அமுதவாணன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in