கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்..சாப்பாடு வீணாகாமல் சாப்பிட்டு சென்ற உறவினர்கள் | Viral

திருமணங்கள் என்றாலே ஒரு திருவிழா தான். அதுவும் தமிழ் முறைப்படி நடக்கும் திருமணங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இரண்டு மாதங்கள் முன்பே புதிதாக துணி எடுப்பது தொடங்கி, பத்திரிக்கை வைப்பது, நிச்சயதார்த்தம் செய்வது, தட்டு மாற்றுவது, பந்தக்கால் நடுவது என்று உறவினர்கள் சூழ விமர்சையாக நடத்துவார்கள் தமிழர்கள். ஆனால் இப்படிப்பட்ட திருமணங்கள் மூடை வரை சென்று பாதியிலேயே நிறுத்தப்படும் சம்பவங்களும் நடப்பதுண்டு. அப்படிப்பட்ட சம்பவம் தான் வேலூரில் நடந்துள்ளது. ஆனால் திருமணம் நின்று போன செய்தியை விட அவர்களது உறவினர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்..சாப்பாடு வீணாகாமல் சாப்பிட்டு சென்ற உறவினர்கள் | Viral 1

விளம்பரம்

 

வேலூர் மாவட்டத்தில் பாக்கம் என்ற பகுதியில் வசித்து வருபவர் சண்முகப்பிரியா, 25 வயதாகும் இவருக்கும் குச்சிப்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று பள்ளிக்கொண்டா என்னும் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. முதல் நாள் இரவு வரவேற்பு, கச்சேரி, விருந்து என வெகு விமர்சையாக நடந்தது. காலை 9 மணிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதிகாலையில் மணப்பெண் தனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இருவரின் பெற்றோரும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாயினர்.

விளம்பரம்

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்..சாப்பாடு வீணாகாமல் சாப்பிட்டு சென்ற உறவினர்கள் | Viral 2

மணப்பெண்ணை எப்படியாவது சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்குமாறு போராடியுள்ளனர். ஆனால் மணப்பெண் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மனம் நொந்து போன பெற்றோர், திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் மன்னிப்புக் கேட்டு திருமணம் நின்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அனைவருக்கும் தயார் செய்த காலை டிபன் வீணாகிவிடும் என்ற காரணத்தினால் அனைவரையும் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் உறவினர்கள் சோகத்துடன் சாப்பிடுவிட்டு மண்டபத்தை காலி செய்துவிட்டு சென்றுள்ளனர். திருமணம் பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி திருமணத்தை நிறுத்தியிருக்க வேண்டும், இல்லை பெற்றோரும் பிள்ளைகளை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றால் இது போல் நிலைமைதான் ஏற்படும். இறுதியில் பாவம் அந்த மாப்பிள்ளைதான்..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment