“இனி 3 குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளலாம்!” மக்கள் தொகை சரிவின் காரணமாக கொள்கையை மாற்றிய சீன அரசாங்கம்

சீனாவில் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திய 2 குழந்தை வரைக்குமே பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற திட்டம் தற்போது மாற்றப்பட்டு 3 குழந்தை கூட பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டிற்கு மேலாக , சீனா சர்ச்சைக்குரிய “ஒரு குழந்தைக் கட்டுப்பாடு” நடைமுறைப்படுத்தியது.

"இனி 3 குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளலாம்!" மக்கள் தொகை சரிவின் காரணமாக கொள்கையை மாற்றிய சீன அரசாங்கம் 1

விளம்பரம்

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு 1 குழந்தைக்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது சீனா.உலகிலேயே மிகவும் கடுமையான குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. இதனால் பெரியளவில் மக்கள் தொகை பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

"இனி 3 குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளலாம்!" மக்கள் தொகை சரிவின் காரணமாக கொள்கையை மாற்றிய சீன அரசாங்கம் 2

விளம்பரம்

இந்நிலையில் சீனா அரசாங்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020 எடுத்தபோது அதன்படி மக்கள் தொகை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.பிரசவங்களை ஊக்குவிப்பதற்கான அரசாங்கம் முயற்சிகள் எடுத்தபோதிலும், இந்த கடுமையான சட்டத்தால் சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் 2020 ஆம் ஆண்டில் தொடர்ந்து 12 மில்லியனாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

"இனி 3 குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளலாம்!" மக்கள் தொகை சரிவின் காரணமாக கொள்கையை மாற்றிய சீன அரசாங்கம் 3

விளம்பரம்

அதுமட்டுமில்லாது கடந்த மாதம் வெளியிடப்பட்ட 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் 1960 களில் இருந்து சீனாவின் மக்கள் தொகை மிக மெதுவாக வளர்ந்து 1.41 பில்லியனை எட்டியது என்பதைக் தெரிவித்துள்ளது.

"இனி 3 குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளலாம்!" மக்கள் தொகை சரிவின் காரணமாக கொள்கையை மாற்றிய சீன அரசாங்கம் 4

விளம்பரம்

இதே நிலைமை தொடர்ந்தால் சீனாவில் முதிவர்கள் மட்டுமே இருப்பார்கள். மக்கள் தொகை சரிவை கண்ட நிலையில் தற்போது தம்பதியினருக்கு அதிகபட்சம் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீனா அரசாங்கம் அனுமதியளித்து குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையை தளர்த்தியுள்ளது.

"இனி 3 குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளலாம்!" மக்கள் தொகை சரிவின் காரணமாக கொள்கையை மாற்றிய சீன அரசாங்கம் 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment