பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் வீடியோ செய்து இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.கமல்ஹாசனே தனலக்ஷ்மிக்கு ஆதரவாக குறும்படத்தினை போட்டு காண்பித்துள்ளார்.இருப்பினும் அவர் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் கமல்ஹாசன் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வருகிறார்.இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.
தற்போது இவரது ரீல்ஸ் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.அதன்படி இவர் சேர் மீது ஏறி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.,ரசிகர்கள் இது பிக் பாஸ் தனலக்ஷ்மியா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்,மேலும் வீடியோவுக்காக இப்படி செய்தால் காயம் பட்டுவிட்டால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.