விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக தன் முன்னாள் மனைவியை பற்றி பேசிய தனுஷ் | Aishwarya | Dhanush

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்குப்பின் முதன்முறையாக ஐஸ்வர்யாவை வாழ்த்தியுள்ளார் தனுஷ். ஐஸ்வர்யா இயக்கிய பயணி என்ற ஆல்பம் வெளியாகவுள்ளது. இதனை ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட உள்ளார். இதற்காக தனுஷ், ஐஸ்வர்யாவை வாழ்த்தியுள்ளது அவர்களது ரசிகர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். வாழ்க்கையில் பல இன்பம் துன்பங்களில் பங்கெடுத்த எனது மனைவியும், தோழியுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு தனுஷ் அறிவித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள்

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக தன் முன்னாள் மனைவியை பற்றி பேசிய தனுஷ் | Aishwarya | Dhanush 1

விளம்பரம்

இது தனுஷ் ரசிகர்களிடையேவும், குறிப்பாக அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த பிறகு இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு இவ்வாறு மணவாழ்க்கையை முறித்துக் கொள்வது ஏற்ப்புடையது இல்லை என்று ஒரு தரப்பினரும், இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மற்றொரு தரப்பும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் இந்த தகவல் வெளியான பின்பு இதுவரை தனுஷிடம் இருந்தோ, ரஜினியிடம் இருந்தோ அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியோ, பேட்டியோ வெளியாகவில்லை. Youtube Video Embed Code Credits: Behindwoods

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக தன் முன்னாள் மனைவியை பற்றி பேசிய தனுஷ் | Aishwarya | Dhanush 2

விளம்பரம்

இவர்கள் பிரிவை அறிவித்தப்பிறகு இரண்டு முறை ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஒரு முறை கோவிட் தொற்றாலும், மறுமுறை உடல் பலவீனத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்பொழுது எல்லாம் தனுஷ் ஐஸ்வர்யாவை பற்றி அவர் உடல் நலம் பற்றியோ எந்த கருத்தும் கூறாமல் இருந்து வந்தார். தற்போது அவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆல்பம் சாங் வெளியிட உள்ளதையடுத்து அவருக்கு ட்விட்டரில் அவரை டாக் செய்து தனுஷ் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இவர்கள் பிரிந்த பிறகு முதன்முறையாக தனுஷ் ஐஸ்வர்யாவை வாழ்த்தியுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குஷி பட ஜோதிகா போல மாறிய BIGGBOSS ஜோவிகா புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment