குட் நைட் – திரைவிமர்சனம் (?/5)

ஜெய் பீம் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குட் நைட்.இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இப்படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் இவருடன் ரமேஷ் திலக்,பக்ஸ் ,பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் கண்டு வருகின்றனர்.

குட் நைட் - திரைவிமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

கூட்டு குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் மணிகண்டன்.வீட்டின் ஓனராக வருகிறார் பாலாஜி சக்திவேல் அவர் வீட்டில் இருப்பவர் தான் கதாநாயகி மீதா,பாலாஜி சக்தி வேல் தான் மீதாவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.இப்படி குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வரும் மணிகண்டன் தான் தூக்கத்தில் விடும் குறட்டையால் அசிங்கப்படுத்தப்பட்டு பெரும் அவமானங்களுக்கு உள்ளாகிறார்.இந்நிலையில் நாயகி மீதா மீது காதலில் விழுகிறார் மணிகண்டன்,இருவரும் திருமணமும் செய்துகொள்கிறார்கள்,திருமணத்திற்கு பிறகு இவர் விடும் குறட்டையால் என்ன ஆனது இதனால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறதா என்பதே மீதி கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கணவர் அட்லீ உடன் விடுமுறையில் வெளிநாட்டில் பிரியா

குட் நைட் - திரைவிமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள மணிகண்டன் தனது எதார்த்த நடிப்பினை காண்பித்து கிளப்ஸ்களை பெற்றுள்ளார்,அதே போல் படத்தில் நடிகர்கள் தேர்வு மிகவும் கட்சிதமாக அமைந்துள்ளது பாராட்டுக்குரியது,அனைவரும் தங்களது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி காண்பவர்களை படத்துடன் ஒன்றவைத்துள்ளனர்.குறிப்பாக கதாநாயகி மீதா மணிகண்டனுக்கு இணையான நடிப்பினை காண்பித்து கவர்ந்துள்ளார்.மணிகண்டன் அக்கா மாப்பிள்ளையாக வரும் ரமேஷ் திலக் தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்,குறட்டை விடுபவர்கள் படும் பாடுக்களை தத்துரூபமாக எடுத்த இயக்குனர் விநாயக் சந்திரசேகர்க்கு பெரும் பாராட்டுக்கள் ,குறட்டை விடுபவர்களை கேலி செய்யும் பொழுது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அழகாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர்,வலிமையான திரைக்கதை படத்திற்கு கூடுதல் பலத்தினை கொடுத்துள்ளது.ஒவ்வொரு காட்சிகளுக்கும் சான் ரோல்டன் இசை பார்ப்பவர்களின் மனதினை ஏதோ செய்கிறது.மொத்தத்தில் இப்படம் ரசிகர்களை ரசிக்க வைத்ததே தவிர தூங்க வைக்கவில்லை

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment