The Indian Times

எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க… BB வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி உருக்கமான பதிவு

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்.இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது முழு உழைப்பையும் காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் பட்டையை கிளப்பினார் ஜனனி.

Advertisement

அண்மையில் நடந்த சொர்கம் மற்றும் நரகம் போட்டியில் தனது கடின உழைப்பை காண்பித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்நிலையில் வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.அதன்படி அந்த பதிவில் அவர் கூறியதாவது,பிக் பாஸ் வீட்டில் நான் இருந்தபோது என்னை ஏற்றுக்கொண்ட அனைவர்க்கும் நன்றி,உங்களின் வாக்குகள் தான் என்னை அதிகளவு ஊக்கம் ஆக்கியது.உங்களின் எதிர்பார்ப்புகளை இத்தனை நாள் நான் பூர்த்தி செய்யவில்லை என்றால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ,இனி உங்களை முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in