முதல் முறையாக மகனை காண்பித்த ஜாங்கிரி மதுமிதா

2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகிய ஒரு கல் கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் மதுமிதா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பிரபலம் ஆகிய மதுமிதா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். இவரும் ஒரு விஜய் டிவி தயாரிப்பே,2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகி தொடர்ந்து முயற்சி செய்து தற்போது வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கதாநாயகனாக அறிமுகம் ஆகும் பிக் பாஸ் மணிகண்டன்.... அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு

முதல் முறையாக மகனை காண்பித்த ஜாங்கிரி மதுமிதா 1

பல முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்து விட்டார் மதுமிதா.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.2019 ஆம் ஆண்டு மோசஸ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் அண்மையில் கர்ப்பமாக இருப்பதை இவரின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகியதினை வைத்து ரசிகர்கள் தெரிந்துகொண்டனர்.மேலும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  படம் வேறலெவல் தாறுமாறு.... ஆஸ்கார் விருதே கிடைக்கும்... விடுதலை PUBLIC REVIEW

முதல் முறையாக மகனை காண்பித்த ஜாங்கிரி மதுமிதா 2

இந்நிலையில் அண்மையில் ஜாங்கிரி மதுமிதா-மோசஸ் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியது.இதனால் இவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் தம்பதியினரும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்நிலையில் முதல் முறையாக தனது மகனின் முகத்தினை ரசிகர்களுக்கு ,காண்பித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பையன் தான் ஜாங்கிரி மாதிரியே உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment