The Indian Times

படப்பிடிப்பில் கமல் சூர்யா கார்த்தி இணைந்து எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திடாத அரியபுகைப்படம் இணையத்தில் வைரல்

உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் விக்ரம்.இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது,உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசி,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் பெரும் ஹிட் அடித்துள்ளது.இப்படத்தில் இறுதியாக சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து படத்தினையே அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

Advertisement

இப்படம் இதற்குமுன்னால் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது.கைதி படத்தில் நடிகர் கார்த்தி டில்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.கைதி பட டில்லியும்,விக்ரமும் அளித்துள்ள போதை பொருள் ரோலெக்ஸ் சூர்யாவுடையது என படத்தினை காண்பித்து அடுத்த பாகத்திற்கு அறிகுறி காண்பித்து படத்தினை முடித்துள்ளார்.கைதி 2 ஆம் பாகத்திலும்,விக்ரம் 3 ஆம் பாகத்திலும் நடிகர் சூர்யா வில்லனாக மிரட்ட உள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Advertisement

இந்நிலையில் டில்லி,ரோலக்ஸ்,விக்ரம் மூன்று பேரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த புகைப்படம் பருத்திவீரன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்பது நடிகர் கார்த்தியை பார்க்கும் பொழுதே தெரிகிறது.தற்போது விக்ரம் படம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த பாகத்தில் இந்த மூன்று பேரையும் ஒரே திரையில் காண்பிப்பார்களா என்பது தெரியவில்லை,இந்நிலையில் தற்போது இந்த மூவரும் இருக்கும் இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in