உதயநிதியின் கண்ணை நம்பாதே படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து இதோ

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக மிரட்டும் வீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது....

உதயநிதியின் கண்ணை நம்பாதே படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து இதோ 1

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் வருகிறார்.தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இனி படங்கள் நடிக்கப்போவதில்லை மக்கள் பணியில் ஈடுபட போவதால் மாமன்னன் படம் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மாலத்தீவில் மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா சஞ்சீவ்

உதயநிதியின் கண்ணை நம்பாதே படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து இதோ 2

தற்போது இவர் இயக்குனர் மு மாறன் இயக்கத்தில் நடித்துள்ள கண்ணை நம்பாதே இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார்.சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் பிரசன்னா,ஸ்ரீகாந்த்,சென்ட்ராயன்,மாரிமுத்து ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது படம் பார்க்கலாம் ஓரளவுக்கு ஓகே என்று சொல்வது போல் உள்ளது,சில காட்சிகள் கட் செய்திருந்தால் இப்படம் இன்னும் நல்லா இருந்துருக்கும் என கூறுகின்றனர்.மேலும் சிலர் படம் கொஞ்சம் மெதுவா போகுது மொக்கையாக உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலித்தவரை கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்ட ரோஜா சீரியல் நாயகி

Embed video credits : THI CINEMAS

Leave a Comment