The Indian Times

அப்ப வெறும் 14 வயசுதான் இயக்குநர் வற்புறுத்தினாரு – கதறும் கல்லூரி மாணவி

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சோனா ஆபிரகாம். 6 ஆண்டுக்கு முன்பு ஃபார் சேல் என்ற மலையாள படத்தில் அடல்ட் சீனில் சோனா நடித்திருந்தார். ஆனால், அந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெப்சைட்டில் வெளியானதால் சர்ச்சை ஏற்பத்துள்ளது .

அப்ப வெறும் 14 வயசுதான் - இயக்குநர் வற்புறுத்தினாரு - கதறும் கல்லூரி மாணவி 1

சோனா ஆபிரகாம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,  “ஃபார் சேல் என்கிற மலையாள படத்தில் என் 14 வயதில்,  காதல் சந்தியாவுக்கு தங்கையாக  நடித்தேன். 150 பேர் முன்னிலையில் அந்த காட்சியை படமாக்க திட்டமிட்ட இயக்குனர் சதீஷ் அனந்தபுரியிடம் நான் நடிக்க மறுப்பதாக கூறியதால், என்னை வற்புறுத்திய அந்த இயக்குனர் தன் அலுவலகத்திற்குள் வைத்து அந்த காட்சியை படமாக்கினார்.

Advertisement

அப்ப வெறும் 14 வயசுதான் - இயக்குநர் வற்புறுத்தினாரு - கதறும் கல்லூரி மாணவி 2

அப்போது அந்த காட்சி குறித்த புரிதல்கள் எனக்கு இல்லை. அந்த ஷூட்டிங் முடிந்தபிறகு, மறுபடியும் ஸ்கூலுக்கு படிக்க போய்விட்டதாகவும் . பிளஸ் 2 படிக்கும்போது, அந்த படத்தில் வெளிவராத பல  சீன்கள் வெப்சைட்டில் வந்துவிட்டது என்றும் குடும்பமே அதை பார்த்து அதிர்ச்சி ஆனதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அப்ப வெறும் 14 வயசுதான் - இயக்குநர் வற்புறுத்தினாரு - கதறும் கல்லூரி மாணவி 3

இந்நிலையில் பார் சேல் படக்குழுவை சேர்ந்தவர்களுக்கும் எதிராக பலத்த கண்டன குரல் எழுந்து வருகின்றது. அதனை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் காவல்துறையினர் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அளித்தேன்.” என்று கூறினார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in