மெக்ஸிகோவில் திடீரென தோன்றிய மிக பெரிய பள்ளத்தால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். மெக்ஸிகோவின் சாண்டா மரியா என்ற பகுதியில் மிக பெரிய ராட்சச பள்ளம் தோன்றியுள்ளது. முதலில் சிறிதாக இருந்து இந்த பள்ளம் இந்தளவிற்கு பெரிய பள்ளமாக உருவெடுத்துள்ளதால் மக்கள் பயத்தில் உறைந்தனர். தற்போது இந்த இந்த பள்ளத்தின் ஆழம் மட்டுமே 60 அடி இருப்பதாகவும் , அகலம் 300 அடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் இந்த பள்ளத்தை அங்கிருந்த வீட்டில் வசிக்கும் நபர் தான் பார்த்துள்ளார், அதுமட்டுமில்லாது அந்த பள்ளத்தில் இருந்த தண்ணீர் கொப்பளித்து கொண்டிருப்பதையும் கண்டுள்ளார். அதன் பின்னர் அந்த நாட்டின் அரசாங்க அதிகாரிகள் வந்து சோதனை செய்ய இந்த பள்ளத்தின் ஆழத்தை அளவிட்டு கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாது இந்த பள்ளம் இன்னமும் பெரிதாய் உருமாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் அங்கிருந்த வீட்டின் சொந்தக்காரர் , தன் குடும்பத்தோடு பாதுக்காப்பான இடத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வீட்டை மிகவும் கஷ்டப்பட்டு கட்டினேன், தற்போது இந்த வீட்டை இழக்க போகிறேன் என்று நினைக்கும்போது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார். இதுமட்டுமில்லாது கிட்டத்தட்ட 70,000 சதுரடி கொண்ட விவசாய நிலம் இந்த பள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட மக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in